'விசைத்தமிழ்'
விசைத்தமிழ் - இது கணினியில் தமிழின் பயன்பாட்டை அனைவரும் எளிதாக உணர்ந்து
செயல்பட ஊக்குவிக்கும் முதன்மையான மென்பொருள்.
கணினியில் தமிழினை அனைவரும் பயன்படுத்தவும், எளிமையாகத் தமிழில் தட்டச்சு செய்திடவும்,
எழுத்துருக்களின் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும், கணினியில் முழுமையாகத் தமிழின்
பயனை அனைவரும் பெற்றிட இம்மென்பொருள் உதவும்.
உலகில் முதல் தமிழ்சொற்பிழைச்சுட்டி மென்பொருள் - விசைத்தமிழ். தமிழில் இதுவரை இல்லாதிருந்த சொற்பிழைத் திருத்தி, சொற்பிழைச் சுட்டி, தமிழ் இலக்கணச் சுட்டி(எழுத்ததிகாரம்) ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரே தமிழ் மென்பொருள் விசைத்தமிழ் மென்பொருள் ஆகும்.
- 23 இலட்சம் தமிழ் வார்த்தைத் தொகுப்புகள் உள்ளடங்கியது.
- அனைத்து வகை எழுத்துருக்களிலும் சொற்பிழைகளைக் கண்டறியும் வசதி கொண்டது.
- அனைத்து வகை விசைப்பலகைகளையும் ஆதரிக்கும்.
- தட்டச்சு செய்யும் போதே சொற்பிழை மற்றும் இலக்கணப்பிழைகளைக் கண்டறிந்து அதற்கான சரியான (அ) நிகரான தமிழ் சொற்களைக் காட்டும் வசதி.
- தட்டச்சு செய்து முடித்தவுடன், அதுவரை தட்டச்சு செய்ததில் நிகழ்ந்த சொற்பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் அறிக்கையாக பார்த்து திருத்திக் கொள்ளும் வசதி.
- ஒரு நொடிக்கு 80 முதல் 120 வார்த்தைகள் வரை சொற்பிழை கண்டறிதல்,இலக்கணப் பிழை கண்டறிதல், சொற்பிழைக்கான திருத்தங்களை காண்பித்தல் ஆகிய பணிகளை வேகமாக முடிக்கும் கட்டமைப்பு கொண்டது.
- அனைத்து மென்பொருள்களிலும் பணி செய்யும் வகையில் கட்டமைக்கப் பட்டது. (உதா: Microsoft Office Word, Microsoft Office Excel, Microsoft PowerPoint, Micorosoft Office FrontPage,Adobe PageMaker,Adobe Photoshop, Adobe inDesign, Adobe Illustrator, Corel Draw, Microsoft Internet Explorer, Mozilla FireFox, Apple Safari, Opera, MSN Messenger, Yahoo Messenger, Corel WordPerfect போன்ற அனைத்து வகை மென்பொருள்களிலும் நேரடியாக பணிபுரியும்.
தமிழில் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகை விசைப்பலகைகளுக்கும் (18 வகை விசைப்பலகைகள்), அனைத்துவகை எழுத்துருக்களுக்கும்(119 வகை எழுத்துருக்குடும்பங்கள்) என அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஒரே மென்பொருள் இந்த விசைத்தமிழ் மென்பொருள்.
- இனி ஒவ்வொரு எழுத்துருவிற்கும் தனித்தனியே விசைப்பலகை மென்பொருளை வாங்க வேண்டியதில்லை.!
- இனி ஒவ்வொரு எழுத்துருவிற்குமென்று தனித்தனியே விசைப்பலகை முறைமைகளைக் கற்றறியும் குழப்பமில்லை (அ) கற்றறிய வேண்டிய அவசியமுமில்லை.
- ஒருவர் அவருக்குத் தெரிந்த விசைப்பலகை முறைமையினைக் கொண்டு எந்த எழுத்துருவிலும் நேரடியாக எந்த மென்பொருளிலும் உள்ளீடு செய்யலாம்.!
- தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாதவர்கள் மிக எளிமையான Transliteration முறைமையில் தமிழில் உள்ளீடு செய்யலாம்.
- விசைத்தமிழ் மென்பொருளில் உள்ள தானாக சொற்பிழைகளைத் திருத்தும் வசதி(Auto Correction) மூலம் எந்த எழுத்துருவிலும் எந்தவொரு மென்பொருளிலும் உள்ளீடு செய்யும்போது நிகழும் உள்ளீட்டுப் பிழைகளைத் தானாகச் சரிசெய்து கொள்ளும் வசதி உள்ளிணைந்தது.
- விசைத்தமிழ் மென்பொருளில் உள்ள முகவரி புத்தகத்தின் வசதியின்(Auto Insert Address Book) மூலம் ஒருவரின் முழு முகவரியினை நீங்கள் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் எழுத்துருவில், தட்டச்சு செய்து கொண்டிருக்கும் மென்பொருளில் உள்நுழைக்கலாம்.
- இன்னும் பல வசதிகள் .......
- 65,000 ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான 1,35,000 தமிழ் பொருள் தரும் உலகின் மிகப்பெரிய ஆங்கிலம்-தமிழ் மின்னகராதி..
- எந்தவொரு மென்பொருளிலும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது அவ்வார்த்தைக்கான தமிழ் பொருளை உடனுக்குடன் திரையில் காண்பிக்கும் வசதி.
தமிழில் உள்ள எந்தவொரு எழுத்துருக்களில் உள்ளீடு செய்யப்பட்ட தகவல் (அ) கோப்பினை நீங்கள் விரும்பும் எந்தவொரு எழுத்துருவிற்கும் நொடிகளில் மாற்றித்தரும் வசதி உள்ளடங்கியது. யுனிகோடு, டாம்99,டாப்,டிஸ்கி, இஸ்கி, டேன் 2007 உட்பட 119 வகை எழுத்துருக் குடும்பங்களையும் ஆதரிக்கும் வசதி.