'மென்பொருள் வசதிகள்'
விசைப்பலகைகள் ஒருங்கிணைப்பு
எங்கள் விசைத்தமிழ் மென்பொருள் அனைத்து (119 வகை) எழுத்துருக் குடும்பங்களையும் 18 வகையான விசைப்பலகைகளையும் ஒருங்கிணைக்கும் முதல் மென்பொருளாக அமைந்துள்ளது
சொற்களின் தொகுப்பு
விசைத்தமிழ் மென்பொருளில் பழங்காலம் முதல் தற்போது பேச்சுத் தமிழ் வரை உள்ள அடிப்படை சொற்கள் மற்றும் அவற்றின் விகுதிகள் உட்பட சுமார் 23,00,000 சொற்களை தொகுத்துள்ளோம். இதன் மூலம் கணினியில் உள்ளீடு செய்யும் போதே பெருவாரியான சொற்பிழைகளை திருத்திக் கொள்ள முடியும்
இலக்கணப் பிழைச்சுட்டி
தொல்காப்பியம் மற்றும் நன்னூல் அடிப்படையிலான பெருவாரியான எழுத்திலக்கண விதிமுறைகளை உள்ளடக்கி விசைத்தமிழ் மென்பொருள் செயல்பட்டு கணினியில் உள்ளீடு செய்யும் போதே நிகழும் இலக்கணப் பிழைகளை சுட்டிக் காட்டும்
அனைத்து மென்பொருளிலும் செயலாற்றும்
கணினியில் எந்தவொரு மென் பொருளிலும் (Ex: Adobe Page Maker, Adobe Photoshop, Corel Draw, Adobe Indesign, Microsoft Office Word, Microsoft Office Excel, Microsoft Office PowerPoint Quark Express, Microsoft Office Front Page, Internet Explorer, Microsoft Office Outlook, Yahoo Messenger, MSN Messenger, Open Office, IBM Lotus Notes, Mozilla Firefox, Apple Safari, etc..,) எந்தவொரு எழுத்துருவிலும், எந்தவொரு விசைப்பலகையின் வாயிலாகவும் உள்ளீடு செய்யும் போதே எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழைகளை சுட்டிக்காட்டும் வசதி
செயலாற்றும் வேகம்
தட்டச்சு செய்யும் போதே நொடிக்கு சுமார் 120 முதல் 200 வார்த்தைகள் வரை சொற்பிழைகள் மற்றும் இலக்கணப்பிழைகளை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதுடன் அதற்கான சரியான (அ) நிகரான தமிழ் வார்த்தைகளைப் பட்டியலிடும்
பிழைகளின் தொகுப்பு
விசைத்தமிழ் மென்பொருள் வாயிலாக உள்ளீடு செய்யும் போது பயனர் செய்த உள்ளீட்டுப் பிழைகளை மொத்தமாக பிழைகளின் சுருக்கத் தொகுப்பாக (நஞிஙுஙுஹசுட் யகூக்ஞு) காண்பிக்கும் வசதி உள்ளடங்கியது
எழுத்துரு மாற்றம்
எந்த எழுத்துருவில் உள்ளீடு செய்யப் பட்டிருப்பினும் அதை வேறொரு எழுத்துருவிற்கு மாற்றம் செய்யும் வசதி தமிழில் இந்த மென்பொருளில் மட்டுமே உண்டு. இதன் காரணமாக தமிழ் தகவல் கோப்பு பரிமாற்றம் எளிமையாக்கப் படுகிறது
எழுத்துப்பிழைகளை தானாக சரிசெய்யும்
ஆங்கில மென்பொருளிலும் இல்லாத வசதியாக தமிழில் முதன்முறையாக எல்லாவிதமான மென்பொருட்களிலும் தட்டச்சு செய்யும் போதே நிகழும் எழுத்துப்பிழைகளை தானாக சரிசெய்து கொள்ளும் (அஞிஞ்ச் இச்சுசுக்ஷஞ்கூச்ஙூ) வசதி உள்ளடங்கியது
உள்நுழைக்கும் வசதி
ஆங்கில மென்பொருளிலும் இல்லாத வசதியாக தமிழில் முதன்முறையாக எல்லாவிதமான மென்பொருட்களிலும் தட்டச்சு செய்யும் போதே எளிமையாக ஒரு ழுழு வாக்கியம் அல்லது ஒரு பாராவை பயன்படுத்திக் கொண்டிருக்கும் மென்பொருளில் உள்நுழைக்கும் வசதி (Auto Insertion / Shortcut Keying) அமையப் பெற்றது
ஆங்கில விசைப்பலகை மூலம் தமிழில் உள்ளீடு
தமிழில் தட்டச்சு செய்யத் தெரியாதவர்களும் எளிமையாக கணினியில் தமிழில் உள்ளீடு செய்யும் வகையில் ஆங்கில எழுத்தடிப்படையிலான Transliteration Keyboard வசதி அமையப் பெற்றது Ex: Vanakkam – வணக்கம்
எழுத்துப் பெயர்ப்பு
9 இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ததை மற்றொரு மொழிக்கு மாற்றித்தரும் Language Transliteration வசதி உள்ளடங்கியது
Tamil, Telugu , Kannada , Malayalam , Bengali , Punjabi , Oriya , Hindi ,
Gujarathi
உ.ம்., : வணக்கம் वणक्कम् vanakkam
அகர வரிசைப் படுத்துதல்
அனைத்துவகை தமிழ் எழுத்துருக்களிலும் அகரவரிசைப் படுத்த உதவும் வசதியும் பக்ஞூஞ் நச்சுஞ்கூஙூகீ இதில் அமைந்துள்ளது
16 பிட் என்கோடிங்கிற்கு மாற்றும் வசதி
இது வரை பயன்பாட்டில் உள்ள அனைத்து வகை Encoding களையும் தமிழக அரசு புதிதாக அறிமுகம் செய்யவிருக்கும் TASE 16 Bit Encoding ற்கு மிக எளிமையாக நொடியில் மாற்றித் தரும் வசதி. மேலும் பஅநஉ 16 Bit Encoding லேயே தற்போதைய விசைப்பலகை மூலம் தட்டச்சு செய்யவும் இயலும் வசதி
விசைத்தமிழ் 2008 மூலம் நேரம் மற்றும் பணம் சேமிப்பு
- பிழை திருத்தப் பணி சுலபமடைவதால் பணி நேரம் மற்றும் செலவு 65 % குறைக்கலாம்
- சாதாரணமாக ஓரு தகவலை இரண்டு அல்லது மூன்று முறை நகல் எடுத்து பிழை திருத்தம் செய்ய வேண்டி உள்ளது. தற்பொழுது ஓரு பக்கதில் ஏற்படும் பிழைகள் மிகவும் குறைந்து விடுவதால் அதற்கு உண்டான நகல் எடுக்கும் தாள் செலவு மற்றும் பிரிண்டர்க்கு உண்டான செலவுகள் குறைக்கலாம்
- பத்திரிக்கைகள் தற்பொழுது அனைத்து செய்திகளையும் மாலை முதல் இரவு 9 மணிக்குள் தட்டச்சு செய்து முடிக்க வேண்டிய நிலையில் உள்ளன. காரணம் பிழை திருத்தும் பணி. விசைத்தமிழ் மூலம் பெருமளவு நேரம் குறைவதால் செய்திகள் தட்டச்சு செய்யும் நேரம் சுமார் 10 மணி வரை நீட்டிக்கலாம். இதன் மூலம் கடைசி செய்தியின் நேரம் நீட்டிக்கப் படுகிறது
- அதிகமான பிழைகள் ஏற்படுவதால் நம் கண்ணையும் மீறி ஓரு சில பிழைகள் நடந்துவிடுகின்றது. பிழைகள் மிகவும் குறைவதால் சுமார் 95 % துல்லியமான தகவல் கிடைக்கப்படுகிறது